தர்மபுரியில் இருந்து சேலம் நோக்கிச் சென்ற தனியார் பேருந்து, வெள்ளக்கல் தேசிய நெடுஞ்சாலை அருகே பயணிகளை ஏற்றாமல் சென்றதால், பேருந்துக்குள் இருந்த பயணிகள் ஆத்திரமடைந்து பேருந்தை சிறைபிடித்தனர். ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த தொப்புர் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து, பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.