தர்மபுரியில் பிஎஸ்என்எல் அலுவல
கம் முன்பு வியாழக்கிழமை மாலை
பாஜக மாவட்ட மகளிர் அணி சார்பில் கண்டன
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் கலையரசி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரத்தை கண்டித்தும், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. மேலும், தமிழகத்தில் அதிகரித்து வரும் போதை கலாச்சாரத்தை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. இதில்
பாஜக மகளிர் அணி மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.