தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை, காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் தலைமையில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீதரன் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்துகொண்டனர். முகாமில் பெறப்பட்ட 106 மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு, அனைத்து மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டது. மேலும், புதிதாக பெறப்பட்ட 39 மனுக்கள் விசாரணைக்காக அந்தந்த காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.