தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்கள் தங்களது பல்வேறு கோரிக்கைகள் மற்றும் உதவித்தொகைகள் தொடர்பாக மொத்தம் 518 மனுக்களை மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸிடம் வழங்கினர். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கவிதா, மகளிர் திட்ட இயக்குநர் அ. லலிதா ஆகியோர் உடனிருந்தனர்.