தர்மபுரி: ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம்

0பார்த்தது
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சதீஷ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கட்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள், உதவித்தொகைகள், உதவி உபகரணங்கள் வேண்டி மொத்தம் 517 மனுக்களை அளித்தனர். தகுதியான மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி