தருமபுரி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 78வது ஆண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு வள்ளலார் மைதானத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை நிலைய செயலாளர் மாவட்ட செயலாளர் டி.கே. ராஜேந்திரன் தலைமை தாங்கி அனைவரையும் வரவேற்றார். மாவட்ட அவைத் தலைவர் முத்துசாமி முன்னிலை வகித்தார். அதிமுக மாவட்ட செயலாளர் கே.பி. அன்பழகன், தர்மபுரி எம்எல்ஏ எஸ்.பி. வெங்கடேஸ்வரன், அமைப்பு செயலாளர் ஆட்சி மன்ற குழு தலைவர் ஆர்.ஆர். முருகன், பாஜக மாவட்ட தலைவர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.