தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி - லளிகம் பிரதான சாலையில் உள்ள ரயில்வே பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இன்று முதல் 4 நாட்களுக்கு காலை முதல் மாலை வரை தண்டவாளம் மூடப்பட்டுள்ளது. நேற்று மாலை ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிப்பு ஒட்டப்பட்ட நிலையில், இன்று காலை 8 மணிக்கு ரயில்வே பாதை மூடப்பட்டது. இதனால், வேலைக்குச் செல்வோர் மற்றும் பள்ளி, கல்லூரிக்குச் செல்வோர் மாற்றுப் பாதையில் சுமார் ஏழு கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டியிருப்பதால் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.