தர்மபுரியில் நேற்று காலை முதல் விட்டு விட்டு பெய்த சாரல் மழையால், இரவு முதல் இன்று காலை வரை பெய்த மழையால் சாலைகளில் மழைநீரும் கழிவுநீரும் கலந்து ஆறாக ஓடியது. இலக்கியம்பட்டி கீழ் மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் வீடுகளுக்கு முன்பு மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது. மேலும் சில வீடுகளிலும் மழைநீர் புகுந்துள்ளது. மழைக்காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.