வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், வருவாய் & பேரிடர் மேலாண்மைத்துறை, நில அளவைத்துறையில் பணிபுரிந்து வரும் அலுவலர்களின் பாதுகாப்பு மற்றும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க சிறப்பு பணிப்பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாநிலம் தழுவிய வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் 9வது நாளான இன்று புதன்கிழமை, மாவட்ட தலைவர் துரைவேல் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்ட வருவாய் துறையினர் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.