தர்மபுரி: பட்டா குறித்து அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம்

64பார்த்தது
தர்மபுரி: பட்டா குறித்து அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம்
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட நகர்ப்புற பகுதிகளில் வீட்டுமனை பட்டா வழங்கும் சிறப்பு திட்டம் குறித்த துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நில நிர்வாக ஆணையர் கே. சு. பழனிச்சாமி தலைமையில், தருமபுரி மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ் முன்னிலையில் நடைபெற்றது. உடன் தருமபுரி மாவட்ட வருவாய் அலுவலர் ஆர். கவிதா, கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலர் அ. சாதனைகுமரன் இருந்தனர். இதில் தருமபுரி மாவட்டத்தில் நல்லம்பள்ளி, பாலக்கோடு, பென்னாகரம், காரிமங்கலம், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், மொரப்பூர், கடத்தூர் போன்ற பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் தங்களுக்கு வீட்டுமனை பட்டா வேண்டும் என்று மனுக்கள் அளித்திருந்தனர். இந்த மனுக்கள் அந்தந்த துறை அலுவலர்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டுள்ளன. தகுதி உடைய நபர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்குவது குறித்து ஆய்வு கூட்டம் நடந்தது. அரசுத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி