தர்மபுரி: சித்தலிங்கேஸ்வரர் கோவிலில் சிவராத்திரி வழிபாடு

4பார்த்தது
தர்மபுரி மாவட்டத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நேற்று முதல் இன்று காலை வரை பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. குறிப்பாக, தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட எஸ். வி. ரோடு பகுதியில் உள்ள பழமை வாய்ந்த சித்தலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று மாலை முதல் இன்று திங்கட்கிழமை காலை வரை சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் மற்றும் நான்கு கால பூஜைகள் நடைபெற்றன. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி