தர்மபுரி: அங்காடியில் 13. 81 லட்சத்திற்கு பட்டுகூடுகள் விற்பனை

1பார்த்தது
தருமபுரி நான்கு ரோடு பகுதியில் உள்ள அரசு பட்டுக்கூடு அங்காடியில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வெளி மாவட்டங்களிலிருந்தும் வந்த 28 விவசாயிகள் 1768 கிலோ பட்டுக்கூடுகளை விற்பனை செய்தனர். அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ. 856-க்கும், சராசரியாக ரூ. 781.12-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 527-க்கும் ஏலம் போனது. இதன் மூலம் மொத்தம் ரூ. 13,81,453-க்கு பட்டுக்கூடுகள் விற்பனையானதாக தருமபுரி அரசு பட்டுக்கூடு அலுவலர்கள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி