தர்மபுரி உழவர் சந்தை அருகே உள்ள அரசு பட்டுக்கூடு அங்காடியில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில் சேலம், ஈரோடு, ஓசூர், கிருஷ்ணகிரி, அரூர், திருவண்ணாமலை ஆகிய பகுதிகளில் இருந்து 39 விவசாயிகள் 2262 கிலோ பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ. 669, குறைந்தபட்சமாக ரூ. 348 என சராசரியாக ரூ. 545-க்கு விற்பனையானது. மொத்தமாக 12,35,557 ரூபாய்க்கு பட்டுக்கூடுகள் விற்பனையானதாக பட்டுக்கூடு நல அலுவலர் தெரிவித்துள்ளார்.