தர்மபுரி: சௌமியா அன்புமணி வாகனத்தை பறக்கும் படையினர் ஆய்வு

2பார்த்தது
தர்மபுரி தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் சௌமியா அன்புமணி, புதன்கிழமை மாலை மதிகோன்பாளையம் பகுதியில் பிரச்சாரத்திற்குச் சென்றபோது தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் அவரது வாகனம் சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. அதிகாரிகள் வாகனத்தை முழுமையாகச் சோதித்து, அதில் பணமோ அல்லது பரிசுப் பொருட்களோ இல்லை என்பதை உறுதி செய்தனர். பின்னர் சௌமியா அன்புமணி வாகனம் புறப்பட்டது. இது வழக்கமான சோதனை எனத் தெரிந்ததும் தொண்டர்கள் இயல்பு நிலைக்குத் திரும்பினர்.

தொடர்புடைய செய்தி