தர்மபுரி வெண்ணாம்பட்டியைச் சேர்ந்த சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் சகாதேவன், 3 ஆண்டுகளுக்கு முன் காவல் நிலையம் வந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, அவரது 15 வயது மகளுடன் தகாத உறவு கொண்டு கர்ப்பமாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் சகாதேவன் கைது செய்யப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இன்று வெள்ளிக்கிழமை வெண்ணாம்பட்டியில் உள்ள தேக்கு தோப்பில் சகாதேவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.