தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு அதியமான்கோட்டை கால பைரவர் கோவிலில் சனிக்கிழமை தட்சணகாசி கால பைரவருக்கு அஷ்ட பைரவ யாகம் மற்றும் பல்வேறு யாகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து, 64 வகையான அபிஷேகங்கள், 1,008 அர்ச்சனை, 28 ஆகம பூஜைகள் நடத்தப்பட்டன. சந்தன காப்பு அலங்காரத்தில் பைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர், உற்சவ பைரவர் கோவிலை சுற்றி தேரில் வலம் வந்தார். இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சாம்பல் பூசணியில் தீபம் ஏற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர்.