இன்று நவ. 02 ஞாயிற்றுக்கிழமை, கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கல்லறை தினத்தை முன்னிட்டு நல்லம்பள்ளி அடுத்த கோவிலூரில் உள்ள 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித சவேரியார் தேவாலய கல்லறை தோட்டத்தில் தங்களது முன்னோர்களின் கல்லறைகளை மலர்களால் அலங்காரம் செய்தனர். பங்குத்தந்தை ஆரோக்கியசாமி ஜெப வழிபாடு மற்றும் தீர்த்தம் கொண்டு மந்திரிக்க, பட்டாசுகள் வெடித்து கல்லறை தினத்தை கொண்டாடினர்.