அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகள் சங்கம் சார்பில், தொழிலாளர் நலன்களுக்கு எதிரான நான்கு சட்டத் தொகுப்புகள், விவசாயிகளை அழிக்கும் விதை மசோதா, ஸ்மார்ட் மீட்டர் திட்டங்கள் மற்றும் மத்திய பிஜேபி அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து இன்று வியாழக்கிழமை காலை 11 மணியளவில் தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு அகில இந்திய அளவில் வேலைநிறுத்தம் நடைபெற்றது. முன்னாள் எம்எல்ஏ டில்லிபாபு தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், தர்மபுரி மாவட்டத்தின் ஐந்து சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.