தருமபுரி மாவட்டம் அரூர் தொகுதிக்கு உட்பட்ட இருமத்தூர் அரசு பள்ளியில் 12-ஆம் வகுப்பு மாணவரை உடற்கல்வி ஆசிரியர் குச்சியால் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவர், செவ்வாய்க்கிழமை அரளி விதை குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ள நிலையில், கம்பைநல்லூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.