தர்மபுரி மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தால் ஊழியர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதனால், ஊழியர்கள் சொந்த செலவில் மது பாட்டில்களை திரும்ப பெற ஆட்களை நியமிப்பதுடன், குடோன்களுக்கு வாடகையும் அளித்து வருவதாக கூறி, இந்த நடைமுறையை கைவிட வலியுறுத்தி நேற்று செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டன. இது தொடர்பாக மண்டல அலுவலரிடம் கோரிக்கை மனுவும் வழங்கப்பட்டுள்ளது.