தர்மபுரி: புத்தகத் திருவிழாவை துவக்கி வைத்த அமைச்சர்

72பார்த்தது
தர்மபுரி மாவட்ட நிர்வாகம் தகடு புத்தக பேரவை மற்றும் பாரதி புத்தகாலாயம் இணைந்து நடத்தும் ஆறாம் ஆண்டு புத்தகத் திருவிழா தர்மபுரி மதுராபாய் திருமண மண்டபத்தில் நேற்று அக்டோபர் 04 மாலை மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் புத்தகத் திருவிழாவை தொடங்கி வைத்து பார்வையிட்டார். விழாவில் தர்மபுரி எம்பி மணி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஜிகே மணி, எஸ் பி வெங்கடேஸ்வரன் மற்றும் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் முன்னாள் எம்எல்ஏ தடங்கம் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

புத்தகத் திருவிழாவை யோட்டி பல்வேறு தலைப்புகள் நடைபெற்ற கட்டுரைப்போட்டி, ஓவிய போட்டி, பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற 30க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு புத்தக பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை அமைச்சர் வழங்கினார்.

தொடர்புடைய செய்தி