தர்மபுரி மாவட்டத்தில் இன்று ஜூன் 15 காலை 6 மணி நிலவரப்படி பதிவான மழையின் நிலவரம் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சமீப நாட்களாக தொடர்ந்து மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை பொழிந்து வருகிறது. இன்று காலை 6 மணி அளவில் பதிவான மழை நிலவரம் தர்மபுரி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் 15 மில்லிமீட்டர் மழையும், பாலக்கோட்டில் 5 மில்லிமீட்டர் மழையும், அரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 17.4 மில்லிமீட்டர் மழையும், மொரப்பூரில் 5 மில்லிமீட்டர் மழையும், நல்லம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் 6 மில்லிமீட்டர் மழையும் என தர்மபுரி மாவட்டத்தின் மொத்த மழையளவு 48.4 மில்லிமீட்டர் ஆகவும், மாவட்டத்தின் சராசரி மழையளவு 5.38 மில்லிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.