தர்மபுரி மாவட்டம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை அன்று இறைச்சி விற்பனை வழக்கத்தை விட அதிகரித்துள்ளது. இன்று (23.11.2025) ஞாயிற்றுக்கிழமை அன்று பிராய்லர் கோழி கிலோ ரூ. 260, நாட்டுக்கோழி கிலோ ரூ. 470, ஆட்டுக்கறி கிலோ ரூ. 800 என விற்பனையானது. மேலும், ரோகு மீன் கிலோ ரூ. 170, கட்லா மீன் கிலோ ரூ. 240, பாறை மீன் கிலோ ரூ. 220, விவசாய மீன் கிலோ ரூ. 120 என்ற விலைகளில் மீன் வகைகளும் விற்பனை செய்யப்பட்டன.