தர்மபுரி மாவட்டம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி விற்பனை வழக்கத்தை விட அதிகரிக்கும். இன்று (31-05-2026) ஞாயிற்றுக்கிழமை அன்று பிராய்லர் கோழி கிலோ ரூ. 250, நாட்டுக்கோழி கிலோ ரூ. 450, ஆட்டுக்கறி கிலோ ரூ. 800 என விற்பனை செய்யப்பட்டது. மீன் வகைகளில் ரோகு, கட்லா மீன்கள் கிலோ ரூ. 240, பாறை மீன் கிலோ ரூ. 220, விவசாய மீன் கிலோ ரூ. 150 என்ற விலைகளில் விற்பனை நடைபெற்று வருகிறது.