தர்மபுரி: கலைஞர் பிறந்த நாள் கொண்டாடிய தொழிற்சங்கத்தினர்

3பார்த்தது
தர்மபுரி மாவட்ட மின்சார வாரிய அலுவலகத்தில் திமுக மின்சார வாரிய தொழிற்சங்கத்தின் சார்பில், முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழா நேற்று புதன்கிழமை கொண்டாடப்பட்டது. திமுக தொழிற்சங்கக் கொடி ஏற்றப்பட்டு, கலைஞர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி, தொழிலாளர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. திட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், திட்ட செயலாளர் சக்திவேல், திட்ட பொருளாளர் வெங்கடேசன், கோட்ட செயலாளர் ரகு மாணிக்கம், திட்ட பிரச்சார செயலாளர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி