தர்மபுரி: ஆட்சியர் தலைமையில் அலுவலர்களுக்கு பயிற்சி பட்டறை

283பார்த்தது
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் எல்நினோ விளைவுகளை எதிர்கொள்வது குறித்து வல்லுநர்கள், தன்னார்வலர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கான பயிற்சி பட்டறை நேற்று (14.05.2026) வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சதீஸ் தலைமையில் நடைபெற்ற இந்த பட்டறையில், ஊராட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்றனர். எல்நினோ பாதிப்புகளை எதிர்கொள்ளும் வழிமுறைகள் குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி