தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள ஏரியூர் பேருந்து நிலையம் அருகில், மறைந்த வன்னியர் சங்க தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான காடுவெட்டி குருவின் 8ஆம் ஆண்டு நினைவஞ்சலி இன்று திங்கட்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் முன்னோடிகள் கலந்துகொண்டு அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வில் பல கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.