தர்மபுரி மாவட்டம், ஆத்துமேடு கிராமத்தில் உள்ள அருள்தரும் சர்வாங்க சுந்தரி சமேத நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோவிலில் புதன்கிழமை மாலை 6 மணியளவில் பன்னிரண்டாம் நாள் வஜ்ரவேல் பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கைலாய வாத்தியம் இசைக்கப்பட்டதுடன், அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.