தர்மபுரி: பூதனஹள்ளி கிராம மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

0பார்த்தது
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்தில், பூதனஅள்ளி கிராமத்தில் சுமார் 1000 குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு 2 ஏக்கர் பரப்பளவில் நகராட்சி குப்பை கழிவுகளை சேமித்து, திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணி செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தால் நிலத்தடி நீர் மாசடைந்து, விவசாய நிலங்கள் மலட்டுத்தன்மை அடையும் என அச்சமடைந்த கிராம மக்கள், திட்டத்தை தவிர்க்க கோரி நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு இன்று புதன்கிழமை 150-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தொடர்புடைய செய்தி