தர்மபுரி இலக்கியம்பட்டி நேதாஜி நகரில் பல ஆண்டுகளாக நிலவும் குடிநீர் பிரச்சனையை சரிசெய்யக் கோரி, அப்பகுதி இளைஞர்கள் திங்கட்கிழமை தர்மபுரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். கிராம நிர்வாகம், ஊராட்சி நிர்வாகம், வட்டார வளர்ச்சி அலுவலர் என பலரிடமும் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாததால், மாவட்ட ஆட்சியர் விரைந்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.