தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதிக்குட்பட்ட வட்டுவனஅள்ளி பஞ்சாயத்து கோட்டூர் மலை கிராம மக்கள், 50 ஆண்டுகளாக சாலை வசதி கோரி பலமுறை மனு அளித்தும் நிறைவேற்றப்படாததால், செவ்வாய்க்கிழமை பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக சாலை வசதி செய்து தரவில்லை என்றால், வட்டுவனஅள்ளி பஞ்சாயத்து முழுவதும் ஒன்று கூடி தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர். கிராம மக்களின் போராட்டத்தை கைவிட காவலர்கள் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.