தர்மபுரி: ஒகேனக்கலில் நீர்வரத்து 4000 கன அடியாக அதிகரிப்பு

178பார்த்தது
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதிக்குட்பட்ட ஒகேனக்கல்லில் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று 2000 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று செவ்வாய்க்கிழமை காலை 11 மணியளவில் 4,000 கனடியாக உயர்ந்துள்ளது. இப்பகுதியில் பெய்யும் மழையின் அளவைப் பொறுத்து நீர்வரத்து மாறிக்கொண்டே வந்துள்ளது. மத்திய நீர் வள மேலாண்மைத் துறை அதிகாரிகள் இந்த தகவலை தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி