தர்மபுரி: வரட்டாறு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறப்பு

0பார்த்தது
தர்மபுரி: வரட்டாறு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறப்பு
தர்மபுரி மாவட்டம், அரூர் வட்டம், வள்ளிமதுரை கிராமத்தில் உள்ள வரட்டாறு நீர்த்தேக்கத்திலிருந்து, 17.02.2026 முதல் 28.03.2026 வரை மொத்தம் 40 நாட்களுக்கு 103.68 மில்லியன் கன அடி தண்ணீர் திறந்து விட தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பகுதிகளைச் சேர்ந்த 5108 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும். இடதுபுற கால்வாயில் உள்ள ஏரிகள் மற்றும் நேரடி பாசனத்திற்கு 20 நாட்களும், வலதுபுற கால்வாயில் உள்ள ஏரிகள் மற்றும் நேரடி பாசனத்திற்கு 20 நாட்களும் தண்ணீர் திறக்கப்படும்.

தொடர்புடைய செய்தி