தர்மபுரி: வங்கி கணக்கு முடக்கம்.. பெண்கள் ஆட்சியரிடம் கோரிக்கை

553பார்த்தது
கேத்தனஅள்ளியைச் சேர்ந்த சாமந்தி மகளிர் மன்றத்தினர், கடந்த 7 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றனர். 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு கிராம வங்கியிலிருந்து ரூ. 8,40,000 குழு கடன் பெற்றனர். கடன் தொகையைச் செலுத்தியும், பணத்தைப் பெற்ற தொண்டு நிறுவன ஊழியர் ரசீதை இதுவரை வழங்கவில்லை. மேலும், மகளிர் குழுவினரின் தனிப்பட்ட வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது. இதனால், ஆட்சியரிடம் உரிய நடவடிக்கை எடுக்குமாறு மகளிர் குழுவினர் திங்கட்கிழமை புகார் அளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி