சேலம் மேட்டூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளர் ஜீவா, தடங்கம் மேம்பாலம் அருகே கட்சிக் கொடிகளை அகற்றும் போது மின்கம்பம் உரசியதில் மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இன்று (நவ. 04) செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்தார். இது குறித்து அதியமான்கோட்டை காவலர்கள் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.