தர்மபுரி: தேய்பிறை பஞ்சமி சிம்மஹாருட வராகி அம்மனுக்கு வழிபாடு

0பார்த்தது
தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி அழகாபுரியில் உள்ள 21 அடி உயர சிம்மஹாருட வராகி அம்மன் கோவிலில் நேற்று செவ்வாய்க்கிழமை வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. மாலை நடைபெற்ற தீபாரதனை வழிபாட்டில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், பொதுமக்கள் கோவிலைச் சுற்றி வந்து நெய் தீபம் ஏற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர்.