பாப்பாரப்பட்டி: விஷம் குடித்து கூலி தொழிலாளி தற்கொலை

2பார்த்தது
பாப்பாரப்பட்டி: விஷம் குடித்து கூலி தொழிலாளி தற்கொலை
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே மாதேஅள்ளியைச் சேர்ந்த கூலி தொழிலாளி இளங்கோ (40), மது அருந்தும் பழக்கத்தால் கடந்த ஒரு வாரமாக நெஞ்சுவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். நெஞ்சுவலி அதிகமான நிலையில் வீட்டில் விஷம் குடித்து மயங்கிய அவரை உறவினர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.