தர்மபுரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான வத்தல்மலைக்கு சில ஆண்டுகளுக்கு முன்புதான் சாலை வசதி ஏற்படுத்தப்பட்டது. சாலை வசதிக்கு முன், மக்கள் கால்நடையாக பொம்மிடிக்கு வந்து வியாழக்கிழமை வாரச்சந்தையில் பங்கேற்பது வழக்கமாக இருந்தது. தற்போது பொம்மிடி - வத்தல்மலை சாலை வசதி இல்லாததால் இந்த
போக்குவரத்து தடைபட்டுள்ளது. விரைவில் பொம்மிடி - வத்தல்மலை சாலை அமையும் என சமூக ஆர்வலர் பா ஜெபசிங் தெரிவித்துள்ளார். இது வத்தல்மலைக்கு ஒரு புதிய வரலாற்றை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.