தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரூர் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளர் வசந்தா தலைமையில், காவலர்கள் கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை அரூர் உட்பட பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டதில் கள்ளச்சாராயம், விற்பனை செய்தவர்கள் அரசு மதுபானங்களை வாங்கி சட்ட விரோதமாக பதுக்கி வைத்து அதிகவிலைக்கு விற்பனை செய்வது, ஓட்டல், பெட்டிக் கடையில் மது குடிக்க அனுமதித்தவர்கள் என 11 பெண்கள் உள்பட 72 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 1, 420 மதுபாட்டில், கஞ்சா ஆகியவைற்றை பறிமுதல் செய்தனர்.