அரூர்: சட்டம் ஒழுங்கு & சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வு கூட்டம்

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் மற்றும் அனைத்து துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஸ், தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ. சதீஸ், பேசும்போது, முதலமைச்சர் பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் களைந்து சீரிய நிர்வாகம் வழங்குவதை உறுதி செய்வதற்கு முன்னுரிமை அளித்து, பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு அளிக்கும் வகையில் மக்களுடன் முதல்வர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், 3 கட்டங்களாக பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு ஒருமாத காலத்திற்குள் உரிய அரசின் சேவைகள் மற்றும் தீர்வுகளை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மனுதாரர்களுக்கு வழங்க வேண்டும்.
கோடை காலங்களில் நகராட்சி, பேரூராட்சி, அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் குடிநீர் தட்டுபாடு ஏற்படாத வண்ணம் முன்னேற்பாடு, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, அந்தந்த பகுதிகளில் போதுமான குடிநீர் கிடைப்பதை வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும். மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்திட வேண்டும் என தெரிவித்தார்.