தருமபுரி மாவட்டம் இலக்கியம்பட்டியில் உள்ள செவித்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியில் 2026-2027 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ் இன்று புதன்கிழமை தகவல் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு தலைமை ஆசிரியரை 94884-73760 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது பள்ளி முகவரியை அணுகலாம்.