அரூர்: ஆட்சியர் அலுவலகம் முன்பு தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

243பார்த்தது
அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தை முன்னிட்டு, இந்திய தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாவட்ட செயலாளர் பிரதாபன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. ஒன்றிய பாஜக அரசு 44 தொழிலாளர் சட்டங்களை திருத்தி நான்கு சட்டங்களாக திரும்ப பெற வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு சட்டம் தொடர வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக் கூடாது, காப்பீட்டு துறையில் 100% அந்நிய முதலீட்டை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி