தர்மபுரி: விவசாய கிணற்றில் இருந்த முதலை உயிருடன் மீட்பு

860பார்த்தது
தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கீழ் செங்கபாடி கிராமத்தில் உள்ள 70 அடி ஆழ விவசாய கிணற்றில் முதலை உயிருடன் இருப்பதை திங்கட்கிழமை காலை பொதுமக்கள் கண்டறிந்தனர். உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ராட்சத கயிறுகள் மூலம் முதலையை பத்திரமாக உயிருடன் மீட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி