தர்மபுரி: கஞ்சா, மது பாட்டில்களை பதுக்கி விற்ற 33 பேர் கைது

581பார்த்தது
தர்மபுரி: கஞ்சா, மது பாட்டில்களை பதுக்கி விற்ற 33 பேர் கைது
தர்மபுரி மாவட்டத்தில் போதைப்பொருள் பயன்பாட்டையும், கள்ளச்சந்தையில் மதுபான விற்பனையையும் தடுக்க தர்மபுரி எஸ்பி மகேஸ்வரன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. கடந்த மூன்று நாட்களில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மதுபானங்களை பதுக்கி விற்பனை செய்த 27 பேர், 1102 மதுபாட்டில்கள், 6 இருசக்கர வாகனங்கள் மற்றும் 1700 கிராம் கஞ்சா ஆகியவற்றுடன் மொத்தம் 33 பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை சார்பில் திங்கட்கிழமை மாலை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி