தர்மபுரி மாவட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை அம்மா பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அம்மா பேரவை மாவட்ட செயலாளர் எஸ்ஆர். வெற்றிவேல் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், தகவல் தொழில் நுட்ப மாவட்ட செயலாளர் கோவிந்தசாமி மற்றும் அம்மா பேரவை மாவட்ட, ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். வருகிற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. பல்வேறு அணிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.