தர்மபுரி: பேருந்து நிலையத்தில் அன்னதானம் வழங்கிய தவெகவினர்

369பார்த்தது
தர்மபுரி மேற்கு மாவட்ட தவெக சார்பில் உலக பட்டினி தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி தர்மபுரி நகர பஸ் நிலையம் மற்றும் அரசு மருத்துவமனை முன்பு பொதுமக்களுக்கு அசைவ உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் சிவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கிழக்கு மாவட்ட செயலாளர் விஜயகாந்த், மாவட்ட இணை செயலாளர் வீரமணி, மாவட்ட பொருளாளர் கோபி, நகர செயலாளர்கள் சிட்டி சுரேஷ், விஜயகுமார், கோபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தர்மபுரி மேற்கு மற்றும் கிழக்கு நகர தவெக சார்பிலும் பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி