தருமபுரி வன்னியர் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை, தருமபுரி மாவட்ட ஜோதிட நல சங்க துவக்க விழா மற்றும் ஜோதிட கருத்தரங்கு மாநாடு நடைபெற்றது. பள்ளிபாளையம் தர்மசாஸ்தா ஜோதிட வித்யாலயா சாஸ்தா மணிகண்டராஜ் குத்து விளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தார். ஜோதிடர் வாஸ்து நிபுணர் ஜெயபால் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். ஜோதிடத்தின் சிறப்புக்கள், நவகிரக பெயர்ச்சிகளால் உண்டாகும் பலன்கள், ஒவ்வொரு கிரகங்களின் சிறப்புத் தன்மைகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது. ஜோதிட ஆராய்ச்சி மைய நிர்வாகிகள், ஜோதிடர்கள் பலர் இதில் கலந்துகொண்டனர்.