தர்மபுரி: பாஜக - விசிக மோதல் 70 பேர் மீது வழக்கு பதிவு

1பார்த்தது
அரூரில் பாஜக சார்பில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது, திருமாவளவனை விமர்சித்து பேசியதாக எழுந்த எதிர்ப்பால் பாஜகவினருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இதில் மோதல் ஏற்பட்டு சிலர் காயமடைந்தனர். இது தொடர்பாக இரு தரப்பினரும் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில், ஞாயிற்றுக்கிழமை அன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 20 பேர் மற்றும் பாஜகவைச் சேர்ந்த 50 பேர் என மொத்தம் 70 பேர் மீது அரூர் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி