தர்மபுரி மாவட்டம் அரூர் தொகுதிக்குட்பட்ட கம்பைநல்லூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கால்நடை வார சந்தையில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர். இங்கு ஆடுகள் ரூ. 5000 முதல் ரூ. 11,000 வரையிலும், நாட்டுக்கோழிகள் மற்றும் சேவல்கள் ரூ. 350 முதல் ரூ. 1200 வரையிலும் விற்பனையாகின. மொத்தத்தில், நேற்று நடைபெற்ற சந்தையில் சுமார் 38 லட்ச ரூபாய்க்கு கால்நடைகள் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.