இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி, வெள்ளிக்கிழமை தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் கிடங்கை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதை அவர் உறுதி செய்தார். இந்த ஆய்வில் தேர்தல் வட்டாட்சியர் அன்பு உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.